அதிமுக கூட்டத்தில் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (ஜூன் 13) காலை 10.30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாஜக அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த கருத்தால் அதிமுக, அண்ணாமலை இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியக் கருத்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.