spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு விசுவாசியாக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு விசுவாசியாக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!

we-r-hiring

திருநெல்வேலி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக இருப்பவர் கீழே உள்ள படத்தில் சீமான் பக்கத்தில் இருப்பவர். இவர் ஒரு தாசில்தார்.

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளை தாசில்தாராகவும், அதன் பிறகு நான்குனேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர்.

தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை தாசில்தாராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாற்று பெயரில் அதாவது செல்வன் குமரன் என்கிற பெயரில் செயல் பட்டு வருகிறார்.

கீழே உள்ள படம் கடந்த ஜனவரி 2024 முறை மாவட்ட கலந்தாய்வு சீமான் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!
மேலும் இவர் தற்போது சீமான் கடந்த 11ஆம் தேதி தூத்துக்குடியிலும், 12 ஆம் தேதி கன்னியாகுமரியிலும் ,13ஆம் தேதி தென்காசியிலும் மாவட்ட கலந்தாய்வை முடித்துவிட்டு, இன்று 14 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட கலந்தாய்விலும் கலந்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து  சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்,  அரசு அதிகாரியாக இருந்துகொண்டு நாதக-வில் நிர்வாகியாக இருந்த திருநெல்வேலியை சேர்ந்த தாசில்தார் செல்வகுமார் மீது மாவட்ட நிர்வாகம் திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை தொடங்கியது.

தற்பொழுது வகித்து வந்த பதவியிலிருந்து விலக்கி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார் செல்வகுமார் என செய்திகள் வெளியாகி உள்ளது. எழுத்துப்பூர்வமாக தனது விளக்கத்தை கொடுத்த பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்… இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! – வைகோ 

MUST READ