spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாம்பரம், செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் 44 புறநகர் ரயில்கள் ரத்து!

தாம்பரம், செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் 44 புறநகர் ரயில்கள் ரத்து!

-

- Advertisement -

 

தாம்பரம், செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் 44 புறநகர் ரயில்கள் ரத்து!

we-r-hiring

சென்னை கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் மின்சார ரயில்களை இன்று (பிப்.18) முழுமையாக ரத்துச் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (பிப்.18) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.15 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பராமரிப்புப் பணிகள் நடப்பதால், மேற்கண்ட புறநகர் மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை புறநகர் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம் …… ஷூட்டிங் எப்போது?

இதன் காரணமாக, சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- அரக்கோணம், தாம்பரம்- சென்னை கடற்கரை, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை, காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை, திருமால்பூர்- சென்னை கடற்கரை உள்ளிட்ட 44 புறநகர் மின்சார ரயில்கள் இன்று (பிப்.18) மேலே குறிப்பிட்டுள்ள நேரங்களில் இயங்காது எனத் தெரிவித்துள்ளது.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

புறநகர் ரயில் சேவைகள் ரத்து தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ (அல்லது) சமூக வலைதளப்பக்கங்களையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ