Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக முதல்வர் விஜய் அதிரடி: 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய் அதிரடி: 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

-

- Advertisement -

தமிழகததில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளாா். தமிழக முதல்வர் விஜய் அதிரடி: 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள , ச.ஜோசப் விஜய் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
​முதல்வர் விஜய் பதவியேற்ற சில நாட்களிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மிக அருகில் (500 மீட்டர் சுற்றளவுக்குள்) விதிகளை மீறி செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளைக் கண்டறிய அவர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

​மூடப்படும் கடைகளின் விவரம்:
​அரசு நடத்திய ஆய்வின்படி, விதிமுறைகளை மீறி செயல்படும் பின்வரும் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட முதல்வர் ஆணையிட்டுள்ளார்:

we-r-hiring

​வழிபாட்டுத் தலங்கள் அருகே: 276 கடைகள்
​கல்வி நிறுவனங்கள் அருகே: 186 கடைகள்
​பேருந்து நிலையங்கள் அருகே: 255 கடைகள்
​மொத்தம்: 717 கடைகள்

தமிழகத்தில் தற்போது மொத்தம் 4,765 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் இந்த 717 கடைகளை மட்டும் முதற்கட்டமாக அகற்ற முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது தமிழக மக்களிடையே, குறிப்பாகப் பெண்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ​”மக்களின் பாதுகாப்பும், சமூக நலனுமே இந்த அரசின் முதல் முன்னுரிமை” என முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.

MUST READ