spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபதிவுத்துறைச் சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!

பதிவுத்துறைச் சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் இன்று (ஜூலை 08) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை.

we-r-hiring

நத்தம் பறக்கும் பாலத்தில் கோர விபத்து.. 2 இளைஞர்கள் பலி;

எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பதிவுச்சட்டம் 1908- ன் பிரிவு 78- ல் கட்டண விவர அட்டவணையில் உள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி – பெங்களூரு பெண் கைது

எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாய் எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை 25,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய் எனவும், தனிமனை பதிவிற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் 10,000 ரூபாய் என்று உள்ளதை சொத்தின் சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 10- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ