பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில்,

பொங்கல் திருவிழரவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கலது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரியுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபால், ஆணையர், அனைத்து போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து 4,449 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6,183 சிறப்பு பேருந்துகளும் என மூன்று நாட்களுக்கு சேர்த்து 10,749 சிறப்பு பேருந்துகளுடன் சென்னையில் தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளும் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஜனவரி 16-ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னைக்கு திரும்புவதற்காக 4,334 பேருந்துகளும், மற்ற ஊர்களுக்கு 4,965 பேருந்துகள் என கூடுதலாக 9,319 சிறப்பு பேருந்துகளும் என ஆக மொத்தம் 15,599 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற் கொள்ள ஏதுவாக சென்னையில் 3 இடங்களில் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் மேப்ஸ்(MEPZ) பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், மற்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையம் என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் www.tnstc.in என்கிற இணையதளம் மூலமாகவும், tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்கு வரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
