spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய விதை சட்டங்களை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது – வேல்முருகன் வலியுறுத்தல்

புதிய விதை சட்டங்களை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது – வேல்முருகன் வலியுறுத்தல்

-

- Advertisement -

புதிய விதைச் சட்டம் 2025, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரான சட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது வேல்முருகன் கூறியுள்ளாா்.புதிய விதை சட்டங்களை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது – வேல்முருகன் வலியுறுத்தல்இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், சுற்றுச்சூழல், நாட்டு மக்களுக்கு எதிரான 10-க்கும் மேற்பட்ட புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக,  புதிய விதைச் சட்டம் 2025, தாவர வகைகள் மற்றும் உழவர்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் -2001 என்ற ஆகிய சட்டத்தில் திருத்தங்கள் செய்து புதிய வரைவுச் சட்டத்தை வெளியிட்டு இருக்கிறது. வரும் 12ம் தேதி வரை, இச்சட்ட வரைவின் மீது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், கோவையில் தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநில விவசாயிகள் திரட்டி வைத்து, மரபு வேளாண்மையின் மகத்துவத்தைப் பற்றி வானலாவ புகழ்ந்து பேசி, தான் விவசாயிகளின்  உற்ற நண்பன் என உரத்துப் பேசிய மோடி, இன்னொரு பக்கம் இயற்கை சார்ந்த மரபு வேளாண்மையை அழித்து ஒட்டுமொத்த விவசாயிகளையும் விதைக் கம்பெனிகளிடம் அடிமைப்படுத்தும் இரண்டு திட்டங்களை அறிவித்திருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

we-r-hiring

மரபு சார்ந்த விவசாயத்திற்கு எதிரான இந்த இரு புதிய வரைவுச் சட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள பல மொழி, இன விவசாயிகளின் மரபு அறிவையும், விதை உரிமையையும் முடக்கும் வகையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டம் என்று கூறினாலும், நடைமுறையில் வணிக விதை நிறுவனங்களுக்கும், பன்னாட்டு விதை பன்னாட்டு நிறுவனங்களுக்குமே உதவியாக இருக்கும். அதாவது, புதிய வரைவுச் சட்டத்தின் மூலம், எந்தத் தடையும் இன்றி பன்னாட்டு விதை நிறுவனங்களின் கொடிய கைகளில் விவசாயிகளை சிக்க வைக்கும் முயற்சிகளாகும்.

ஏற்கெனவே, ஒட்டு ரக விதைகளை கள்ளச்சந்தையிலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை திருட்டுத்தனமாகவும் வணிகம் செய்து வருகின்றன. இதற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வகையில் தான். இந்த 2001 சட்டத்தை திருத்தம் செய்து புதிய விதைச் சட்டமாக அரசு கொண்டு வருகிறது. அதேபோன்று, தாவர வகைகள் மற்றும் உழவர்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் -2001 என்ற சட்டத்தில் திருத்தங்கள் செய்து புதிய வரைவுச் சட்டத்தை வெளியிட்டு இருக்கிறது. வரும் 12ம் தேதி வரை, இச்சட்டவரைவின் மீது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு சட்டத் திருத்தங்களும் ஒன்றுக் கொன்று இசைவாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை செயலுக்கு வந்தால் விவசாயிகளின் விதை உரிமை முற்றிலும் பறிக்கப்படும். விதை நிறுவனங்களின் கேள்வி முறையற்ற வேட்டைக் காடாக இந்தியா மாற்றப்படும். கொஞ்ச நஞ்சம் உள்ள மாநில வேளாண் துறை அதிகாரங்களும் பறிக்கப்படும். உழவர்கள் தங்களிடம் உள்ள  இச்சட்டப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தும். இந்திய அரசு கம்பெனிகள் மட்டும் பதிவு செய்யாத இரண்டு ஆண்டுகள் வரை சோதனை விற்பனை செய்து கொள்ளலாம் என கூறுகிறது. ஒரு விதை ரகத்தை பதிவு செய்ய விதையை வெவ்வேறு வகை மண்ணில் வேறு பருவ காலங்களில் விதைத்து முளைப்புத் திறனை சோதனை செய்ய வேண்டும் என இச்சட்டம் நிபந்தனை விதிக்கிறது.

ஒவ்வொரு மண்ணுக்கும் வேறுபட்ட இயற்கைக்கு இசைவான மரபு, மிகை மழை, வறட்சி, வெவ்வேறு வலை தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொள்ள, ஒவ்வொரு வகை மரபு விதைகளும் தனித் தன்டை ஆற்றல் கொண்டவை. ஒரு வகை மண் மழை அளவிலும் வளரக் கூடியவை வெண் ரக விதைகள் ஒன்றை இன்னொரு திருக்கப்பட்ட கலா பூசா என்ற 2 நெல் ரகங்களை கடந்த மே 1 அன்று இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ரகங்களின் மீது சுற்றுக்குழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட நிபந்தனைகளைக்கூட ஒன்று மில்லாமல் செய்வதற்கு தான், இப்போது இந்த இரண்டு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மரபீனி மாற்றப்பட்ட அரிசி, சோளம், சோயா பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டவர்களுக்கு குடல் புற்றுநோய், மலட்டுத்தன்மை நினைவு மறதி, புரிதலில் குறைபாடு போன்ற பல நோய்கள் உண்டாவது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் ஏற்படும் விளைவுகள் முழுவதையும் கண்டறிய நீண்ட கால சோதனைகள் தேவைப்படுகின்றன. மரபீனி மாற்றப்பட்ட விதைக்கும், மரபீனி திருத்தப்பட்ட விதைக்கும் அடிப்படையில் வேறுபாடியில்லை. இது சட்டத்தை ஏமாற்ற உருவாக்கப்பட்ட உத்தியாகும். இச்செயல் தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களின் ஆரோக்கியமான உணவிற்கும், கற்றுக்குழலுக்கும் பல்லுயிர் பாதுகாப்பிற்கும் கடுமையான தெருக்கடியை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்த மரபீனி திருத்தப்பட்ட நெல், விவசாயிகள் ஏற்கனவே வைத்திருக்கும் நெய் ரகங்களிலும் மரபீனி கலப்பு ஏற்பட்டு, அதுவும் மரபீனி மாற்றியதாக மாறிவிடும்.

குறிப்பாக, தமிழ்நாட்டு விவசாயிகளிடம் ஆயிரத்துக்கு மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் உள்ளன. இச்சட்டத்தின் மூலம் கையகப்படுத்தி காப்புரிமையை பன்னாட்டு நிறுவனங்கள் பெற்றுவிடும்.விவசாயிகள் விதைப்பு முதல் அறுவடை வரை நிறுவனங்களை சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடும். இப்போதுள்ள சூழலில் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டம் செயலுக்கு வருமானால் விவசாயிகள் கையில் நிலம் இருக்காது. விதை விற்பனை பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றால் செயற்கையான தட்டுப்பாடு, அதன் மூலம் விலை ஏற்றம் என விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.

எனவே, விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் புதிய விதை மசோதா 2025, தாவர வகைகள் மற்றும் உழவர்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் -2001 ஆகியவற்றை, தமிழ்நாட்டில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு விடக்கூடாது. குறிப்பாக, மாநில அரசின் வேளாண் உரிமைக்கு எதிரான ஒன்றிய அரசின் புதிய விதை சட்டங்களை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளாா்.

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

MUST READ