Homeசெய்திகள்தமிழ்நாடுகடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது- அமைச்சர் எ.வ.வேலு

கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது- அமைச்சர் எ.வ.வேலு

-

- Advertisement -

கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தில், தேசிய கடல் ஆராய்ச்சி மையம், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நடைபெறும் “தமிழ்நாடு கடல் இடம் சார்ந்த திட்டமிடல்” குறித்த கருத்தரங்கை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

we-r-hiring

அதனை தொடர்ந்து, “Shoreline Change Atlas for Tamilnadu” என்ற ஆவண புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து, உரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, இந்தியாவில் 1076 கி.மீ நீளம் கொண்ட இரண்டாவது மிக நீண்ட கடற்பரப்பையும், இந்தியாவின் 13 சதவீத கடல் பரப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது.

கடல் சார்ந்த செயல்பாடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என்றும் சோழர் காலத்திலிருந்தே தமிழ்நாடு கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னிலை கொண்ட மாநிலமாக உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்த பயிலரங்கம் உதவும் என்றும் கடல் பகுதிகளை பாதுகாப்பது மிக முக்கிய பொறுப்பு என்றுன் கடல் சார் பகுதியில் திட்டமிடல் என்பது மீன்பிடித்தல், கப்பல் போக்குவரத்து, சுரங்கன்கள்  தொல்லியல், சுற்றுலா போன்ற கடல் சார்ந்த பகுதிகளில் ஆலோசனைகளை பெற்று புதிய திட்டமிடல்களை உருவாக்கும் வகையில் இந்த பயிலரங்கு உதவியாக இருக்கும் என பேசினார்.

மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளது. துறை முகங்கள், மீன்பிடி பகுதிகள், சதுப்பு நிலங்கள் போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இடங்கள் வளர்ச்சி குறித்து இந்த கருத்தரங்கில் பேசப்படவுள்ளது.

கடல் சார்ந்த இடங்களில் திட்டமிடல் குறித்து சமுக பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல், மீன்வளம், சுற்றுலா போன்றவை குறித்த கருத்துகள் இந்த பயிலரங்கில் பேசப்படவுள்ளதால் இந்த பயிலரங்கு தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

கால நிலை மாற்றம் குறித்து உலகவில் பேசப்பட்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கான தனி அமைச்சரவை உருவாக்கி முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தி வருகிறார்.

1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்கிறது என்றும் வளர்ச்சி என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

MUST READ