தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 2024 பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கி ஒர் ஆண்டு நிறைவு பெரும் நிலையில், வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையிலும் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் 19 அணிகள் வெளியிடப்பட்டது. தற்போது புதியதாக மேலும் ஒன்பது அணிகள் அறிவிக்கப்பட்டு 28 நட்சத்திரங்களை குறிப்பிடும் விதமாக 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
புதியதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது அணிகளின் விவரம்,
- ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் அணி
2. தொழில் முனைவோர் அணி
- NRI அணி
4. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
5. மாற்றுத் திறனாளி அணி
6. இளம் மகளிர் அணி
7. குழந்தைகள் அணி
8. மூன்றாம் பாலினத்தவர் அணி
9. வரலாற்று தகவல் ஆய்வு மற்றும் தகவல் சரிபார்ப்பு அணி
இதன் நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.