தமிழ்நாடு நாளை முன்னிட்டு ”தமிழ்நாடு நாள் விழா” கலை, கலாச்சார, பண்பாட்டு பெருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
“தமிழ்நாடு நாளை” முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் சி. இராமதாஸ் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு நாளை அனைத்து தமிழர்களும் பெருமையுடன், மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

”சுதந்திர இந்தியாவில் 69 ஆண்டுகளுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1 இன்றைய நாள் ”தமிழ்நாடு நாள்” மற்றும் ”தமிழர் தாயகத்தின் பொன்நாளாகும்”.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான இந்த நாளை புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய கொண்டாட்ட நாட்களாக மாநிலம் முழுவதும் கொண்டாடுகின்றன. அதேபோல் தமிழ்நாட்டிலும் ”தமிழ்நாடு நாள் விழா” கலை, கலாச்சார, பண்பாட்டு பெருவிழாவாக, திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மண் செழிக்கவும், தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கவும் உலகத் தமிழர்கள் யாவரும் இந்நாளில் உறுதி ஏற்போம். என தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.


