தமிழர்களுக்கு எதிராக பிரதமரின் இந்த பேச்சு தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மதுரை ஜராவதநல்லூரில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பிரதமர் மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். அவர்களின் டி அவர்களின் டிஎன்ஏதான் வெறுப்பு அரசியல். மதம், இன, ஜாதி என எதிலும் வெறுப்பை தூண்டுவது தான் ஆர்எஸ்எஸின் அடையாளம். அதனால்தான் பிரதமரும் இப்படி பேசுகிறார்,” என்றார்.
பிஹாருக்கு சென்று தமிழர்களைப் பற்றி பேசுவது ஒரிசாவிற்கு சென்று தமிழர்களை பற்றி பேசுவது இப்படி எங்கு சென்றாலும் தமிழர்களை குறைகுறுவதையே வழக்கமாக வைத்துள்ளாா் பிரதமர் மோடி. இது தமிழக மக்களுக்கு எதிரான அணுகுமுறை என்பதை நிரூபிக்கிறது. பாஜகவினர் உண்மையிலேயே தமிழகத்திற்கு விரோதிகள் என்பதை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து தமிழர்களை பிரதமர் அவமானப்படுத்தி வரும் பிரதமர் உடனடியாக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரிவினை, வெறுப்பு, பாகுபாடு ஆகியவை பாஜகவின் டி.என்.ஏவில் உள்ளது. பாஜகவினர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமரின் இந்த பேச்சு கண்டனத்திற்குரியது என மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளாா்.
மேலும், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதை அமித்ஷா மறுக்காதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ”சிறுபிள்ளை கணக்கு போடுவதைப் போல அரசியல் கணக்கு போடுகிறார் அமித்ஷா. அவரது கணக்கு பெயில் ஆகி வருகிறது.
அமித்ஷா அதிமுகவை பாஜகவாக மாற்றியதன் விளைவு அதிமுக கடை காலியாகி விட்டது. வெளியில் உள்ள அலங்கார பொருட்கள் மட்டுமே உள்ளது. உள்ளே சாமான்கள் திருடி செல்லப்பட்டு விட்டது. அதன் காரணமாக அதிமுக ஓட்டுகள் சென்றுவிட்டதன் காரணமாக இப்போது அமித்ஷா குட்டையை கிளற தொடங்கி உள்ளார்.
தமிழகத்தில் அமித்ஷா நினைத்தது என்றுமே நடக்கப்போவதில்லை. புதிய கட்சிகள் தொடங்கி அ.தி.மு.க இடத்தை நிரப்பப்போகிறது என்பதால் மீண்டும் தங்கள் அரசியல் குட்டையை குழப்பும் வேலையை அமித்ஷா தொடங்கியுள்ளார்.
அமித்ஷா எப்பொழுதும் தேர்தலுக்காக குழப்பத்தை ஏற்படுத்துவார். தமிழக அரசியல் குட்டையை குழப்ப அமித்ஷா முற்பட்டாலும் இனி தமிழக மக்கள் குழம்பமாட்டார்கள். தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்னர். அ.தி.மு.க என்பதும் ப.ஜ.க என்பதும் ”அமித் ஷா திமுகவாக” மாறியது என அறிந்து அதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளாா்.
ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்பு – ஆர்.பி.உதயகுமார் பதில்..!!


