spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

-

- Advertisement -

தமிழர்களால் பிஹார் மாநில தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பிரதமர் பேசியிருப்பது கண்டனத்திற்குறியது. இதற்காக பிரதர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரவித்துள்ளாா்.
நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினாா். அப்பொது அவர் இந்த மண்ணில் பிற மொழி பேசும் பிற மாநிலத்தவர்கள் அமைதியாக ஆரோக்கியத்தோடு இருக்கின்றனர். அற்ப தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டு லாபத்திற்காகவும் இந்திய நாட்டு மக்களையும் ஒரு தாய் மக்களாக ஒரு குடியரசின் கீழ் வாழ்கின்ற மக்களை ஒன்றாக பார்க்க வேண்டிய நரேந்திர மோடி பீகார் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுவதாக அவர் பேசியிருப்பது கண்டனத்துக்குறியது  என த.வா.க தலைவர் வேல்முருகன் கூறினாா்.

மேலும், தொடர்ந்து உண்மைக்கு மாறாக ஆர்.எஸ்.எஸ் பிஜேபி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மோடி திமுகவை தான் குறிப்பிட்டு கூறினார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதற்கு பதிலளித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் , திமுகவில் உள்ளவர்கள் வேறு நாட்டவர்கள் அல்ல, திமுகவினரைக்  கூறுவது தமிழ் மக்களை கூறுவதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரவித்துள்ளாா்.

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

we-r-hiring

MUST READ