தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2,27,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
2024 தென் சென்னை மக்களவை தொகுதியின் முக்கிய வேட்பாளர்களாக
திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும் தென் சென்னை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் ஜெயவர்தனும், பா ஜ க சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜனும் அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் முனைவர் தமிழ்செல்வி ஆகியோர் போட்டியிட்டனர்.
இறுதிச்சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை விவரம்
தென் சென்னை – தமிழச்சி தங்க பாண்டியன் (தி.மு.க) 2,27,266 வாக்குகளில் முன்னிலை | |
பதிவான மொத்த வாக்குகள் | 11,00,005 |
திமுக | 5,16,628 |
பாஜக | 2,90,683 |
அதிமுக | 1,72,491 |
நா.தக | 83,972 |
2,27,266வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சோளிங்கநல்லூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 23 கட்டங்களாக எண்ணபட்டன அதில் கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக ஒப்புகை சீட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் நள்ளிரவு 2மணிக்குமேல் வெற்றி உறுதி செய்யப்பட்டு வெற்றிக்கான சான்றிதழை தென்சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அமீத் ஐஏஎஸ் இடம் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக் கொண்டார். அப்பொழுது அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.