spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇறுதிக்கட்டத்தை எட்டிய புதிய குளங்கள் உருவாக்கும் பணி! 

இறுதிக்கட்டத்தை எட்டிய புதிய குளங்கள் உருவாக்கும் பணி! 

-

- Advertisement -

கிண்டி ரேஸ் கோர்ஸில் புதிய குளங்களை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

கிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வாடகை பாக்கி செலுத்தாததால் தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியது. தொடர்ந்து, வேளச்சேரியில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் 4.24 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட 4 குளங்களை அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

we-r-hiring

இந்த நிலையில், கிண்டி ரேஸ் கோர்ஸில் புதிய குளங்களை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எஞ்சிய பணிகள் இன்னும் 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2 குளங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 குளங்கள் அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

இதனிடையே, கிண்டி ரேஸ் கோர்ஸில் ஏற்கனவே 3 குளங்கள் இருக்கும் நிலையில், தற்போது மேலும் 4 புதிய குளங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய குளங்களை உருவாக்கினால் மொத்தமாக 4.6 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ