Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் செவ்வாய்கிழமை கிடையாது

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் செவ்வாய்கிழமை கிடையாது

-

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் செவ்வாய்கிழமை கிடையாது

வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையேயான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.

விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தாம்பரம், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட உள்ள ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கான டிக்கெட் கட்டணங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி சாதாரண வகுப்பு கட்டணம் ரூபாய் 1,620 ஆகவும், ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூபாய் 3,025 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 7 மணிநேரம் 50 நிமிடங்களில் 652 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சென்னை வந்தடையும். செவ்வாய்கிழமை நீங்கலாக மற்ற நாட்களில் எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், விருதுநகருக்கு காலை 7.13-க்கும், மதுரைக்கு காலை 7.50-க்கும், திண்டுக்கல்லில் 8.40-க்கும், திருச்சிக்கு 9.50-க்கும், விழுப்புரம் மதியம் 12 மணிக்கும்,தாம்பரத்திற்கு மதியம் 1.13 மணிக்கும், சென்னைக்கு மதியம் ஒரு மணி 50 நிமிடங்களுக்கும் வந்தடையும்.

MUST READ