தொழிலாளர் நலன்களுக்காக ஏற்கெனவே நடைமுறையிலிருந்த நாற்பத்து நான்கு சட்டங்களையும் திருத்தங்கள் பல செய்து நான்குச் சட்டங்களாக மாற்றியுள்ளது இன்றைய பாஜக அரசு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

இதுகுறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இந்த புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் பல்வேறு சனநாயக உரிமைகளைப் பறிக்கின்றன. குறிப்பாக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இயற்றப்பட்டுள்ள இச்சட்டங்கள், தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிக்கிறது. அத்துடன், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கிற ‘நல வாரியங்கள்’ அனைத்தையும் தேவையற்றவைகளாக்கி தூக்கி எறிகின்றன.
எனவே, தொழிலாளர்களுக்கு விரோதமான இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என பாஜக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என கூறியுள்ளாா்.
சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு