Homeசெய்திகள்சென்னைசுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு

சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு

-

- Advertisement -

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவுபவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருவதாகவும் அதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை என மனுவில் கூறியுள்ளார். சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் உள்ளூர் மக்கள் தங்களது விவசாயப் பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை பணிகள் முறையாக செய்யப்படாததால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 7 மீட்டர் அகலமாக இருந்த இருவழிச்சாலை 10 மீட்டராக அதிகப்படுத்பட்டதாகவும், குறுகலான வளைவு உள்ளிட்டவைகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த வழித்தடத்தை சுங்கச்சாவடி சாலையாக மாற்றுவது தேவையற்ற ஒன்று எனவும் இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், இரண்டு வழிச் சாலையை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நான்கு வழிச் சாலையாக மாற்றி சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக கூறினார். மேலும், இதற்காக நான்காயிரத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து மனுத்தாக்கல் செயப்பட்டுள்ளதாக கூறினார். சாலை பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் எனக் கூறிய நீதிபதி இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை இணைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து, மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பல்கலைக்கழக மாணவிகள் தங்குமிடத்தை பறிப்பது நியாயமல்ல – ராமதாஸ் கண்டனம்

MUST READ