Homeசெய்திகள்தமிழ்நாடு"திமுக மேல இருக்குற கோபத்துல வரலாறே தெரியாம பேசுறாங்க.." - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்...

“திமுக மேல இருக்குற கோபத்துல வரலாறே தெரியாம பேசுறாங்க..” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் அதிரடி!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் கருத்துகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்."திமுக மேல இருக்குற கோபத்துல வரலாறே தெரியாம பேசுறாங்க.." - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் அதிரடி!

திமுக மீதான கோபத்தில் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது; இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை முதல்ல படிங்க என அறிவுறுத்தல்

we-r-hiring

அமைச்சர்களின் பேச்சில் உள்ள வரலாற்றுப் பிழைகளைச் சுட்டிக்காட்டிச் செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், அமைச்சர்கள் அனைவரும் வரலாற்றைச் சரியாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

“அறியாமையில் பேசும் அமைச்சர்கள்”
செய்தியாளர்கள் சந்திப்பில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது,  “சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் அதுசார்ந்த கைதுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகள் முற்றிலும் சிறுபிள்ளைத்தனமானவை. அது அவருடைய அறியாமையையே காட்டுகிறது. திமுகவின் மீது உள்ள கோபத்தில், வரலாற்று உண்மைகளைத் தெரிந்துகொள்ளாமல் சகட்டுமேனிக்கு இதுபோன்று பேசக் கூடாது. அமைச்சர்கள் எல்லாம் முதல்ல வரலாற்றைப் படிக்க வேண்டும்” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்."திமுக மேல இருக்குற கோபத்துல வரலாறே தெரியாம பேசுறாங்க.." - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் அதிரடி!

இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தல்
தொடர்ந்து மிசா காலகட்ட நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர்,  “மிசா சட்டத்தின்கீழ் நடந்த கொடுமைகள் என்னென்ன, அதில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய தெளிவான, அதிகாரப்பூர்வமான விவரங்கள் அனைத்தும் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் விரிவாக இடம்பெற்றுள்ளன. எனவே, உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள விரும்பும் அமைச்சர்கள் முதலில் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைப் படித்துப் பார்த்துவிட்டுப் பேச வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் மிசா குறித்த விவாதம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என உறுதியாகச் சொல்ல முடியாது” – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடி!

MUST READ