spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாங்காடு போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற திருடன்- கோட்டை விட்ட போலீஸ்

மாங்காடு போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற திருடன்- கோட்டை விட்ட போலீஸ்

-

- Advertisement -

மாங்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை திருடிய குற்றவாளியை 5 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்த்தனர். அப்போது வாகனங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது போலீசார் பிடியில் இருந்து திருடன் தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

மாங்காடு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் திருடி சென்றார்.

இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்டது கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஷ்ணு(20), என்பது தெரிய வந்தது. அந்த நபரை கைது செய்து மோட்டார் சைக்கிளை போலீஸார் மீட்டனர்.

மேலும் வாகனத் திருடன் விஷ்ணு மீது பல்வேறு வாகனத் திருட்டு வழக்குகள் உள்ளது. அதனால் மேலும் சில வாகனங்களை பறிமுதல் செய்ய கெருகம்பாக்கம் போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரின் பிடியில் இருந்து விஷ்ணு தப்பி சென்றார். அப்போது அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பித்து சென்ற குற்றவாளியை தேடும் பணியில் மாங்காடு தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

MUST READ