Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர் சேவல் சண்டைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

திருவள்ளூர் சேவல் சண்டைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

-

- Advertisement -

 

திருவள்ளூரில் சேவல் சண்டைப் போட்டிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம்…… உண்மையா? வதந்தியா?….. விஜய் தேவரகொண்டாவின் பதில்!

தைப்பூசத்தையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், தங்கனூரில் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் சேவல் சண்டைப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தேவாரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜன.20) பிற்பகல் 03.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “வரும் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் தங்கனூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் போட்டிகளை உடனே நிறுத்த வேண்டும்; போட்டியின் போது, சேவல்களுக்கு மது வழங்கவோ, காலில் கத்தி கட்டவோக் கூடாது” என்ற நிபந்தனையும் விதித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

‘பள்ளி பாட புத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த்’….. நினைவேந்தல் கூட்டத்தில் ஜெயம் ரவி!

ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி, தங்கனூரில் சேவல் சண்டை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ