Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

-

 

ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று (டிச.05) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை (டிச.06) முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரும் டிசம்பர் 09- ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் 34 செ.மீ. மழையும், ஆவடியில் 28 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

“தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்”- மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!

தெற்கு ஆந்திரா கடற்கரையை பாபட்லாவிற்கு அருகே 4 மணி நேரத்தில் தீவிர புயலாகக் கரையைக் கடக்கக் கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ