spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்"- மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!

“தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்”- மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

"தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்"- மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!
Photo: Sansad

தமிழக அரசு கோரியபடி, மத்திய அரசு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நாடாளுமன்றத்தின் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

“தமிழக அரசு சரியாக செயல்படவில்லை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, “கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை நாசம் செய்துள்ளது. தமிழகம் இவ்வளவு அதிக மழையை அரை நூற்றாண்டுக்கு முன் சந்தித்தது. இதனால் ஏற்பட்ட கடுமையானப் பாதிப்பை விரைவில் சரி செய்துவிட முடியாது.

நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டார். பாதிப்புகளை முதலமைச்சர் எடுத்துக் கூறியுள்ளார். தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ரூபாய் 5,000 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

MUST READ