Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம், புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்!

தமிழகம், புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்!

-

 

தமிழகம், புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்!

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 மக்களவைத் தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 06.00 மணிக்கு நிறைவுப் பெறும்.

இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…

தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் உள்பட நாளைய முதற்கட்ட தேர்தலில் 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் நாளைய வாக்குப்பதிவிற்கு 68,320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45,000 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பில் 17,000 துணை ராணுவத்தினர், 1.20 லட்சம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு உதவ வாக்குச்சாவடிகளில் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு… தனுஷ் வைத்த கோரிக்கை…

மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று (ஏப்ரல் 18) 3- ம் கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இன்று நடக்கும் 3- ம் கட்ட பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ