
தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு வரும் ஜூன் 30- ஆம் தேதியுடன் பணி ஓய்வுப் பெறுகிறார். இந்த நிலையில், புதிய காவல்துறை டி.ஜி.பி.யைத் தேர்வுச் செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம்… பிரம்மாண்டம் காட்ட தயாராகும் படக்குழு!
ஓய்வுப் பெறவுள்ள முனைவர் சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி.யின் தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தமிழக காவல்துறை டி.ஜி.பி. பதவி வகித்த நட்ராஜ் ஓய்வுக்குப் பிறகு டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்டு, அந்த பதவியில் பணியாற்றினார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
தமிழக அரசு பணிகளுக்கான பணியாளர்களை டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு தேர்வு செய்து வருகிறது.
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது தனுஷ், அமலாபால் கூட்டணி!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சைலேந்திர பாபு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக காவல்துறைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.