spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்த 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமாம்

இந்த 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமாம்

-

- Advertisement -

மக்களே உஷார்...கரையை நெருங்கும் மிக்ஜம் புயல்!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை (26.07.2024) 08:30 மணியளவில் மேற்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலபகுதியை நோக்கி நகர்ந்து, இன்று காலை (27.07.2024) மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா பகுதியில் நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 27.07.2024 மற்றும் 28.07.2024:தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

29.07.2024 தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

MUST READ