Homeசெய்திகள்தமிழ்நாடு#GoldRate : சரிந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?

#GoldRate : சரிந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது விலை குறைவது போல போக்கு காட்டினாலும், கணிசமாக விலை உயர்ந்திருப்பதே நிதர்சனமான உண்மை. அதிலும் கடந்த பிப்ரவரி 1ம் தேதி வரலாற்றில் முதன்முறையாக தங்கம் விலை ஒரு சவரன் ரூ.64,000 ஐ தாண்டியது. அதன்பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, சர்வதேச சந்தை நிலவரம் என பல்வேறு காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

தங்கம் விலை

அந்தவகையில் நேற்று முன்தினம் சவரனுக்கு 560 ரூபாயும், நேற்றைய தினம் சவரனுக்கு 440 ரூபாயும் அதிகரித்தது. அதன்படி நேற்றைய தினம் ( மார்ச் 05) ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.64,520க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை குறைந்து ரூ.64,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.8,020க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ