spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் பராமரிப்பு பணி: எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள்

ரயில் பராமரிப்பு பணி: எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள்

-

- Advertisement -

ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் சில தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் டிசம்பர் 20 முதல் 23வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயில் பராமரிப்பு பணி: எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள்

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், டிசம்பர் 20, 21, 22 தேதிகளில் வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்குப் புறப்படும் முத்துநகர் ரயில் டிசம்பர் 21, 22, 23 தேதிகளில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து துவங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.

we-r-hiring

மேலும், மைசூரு–தூத்துக்குடி ரயில் வாஞ்சி மணியாச்சிவரை இயக்கப்படும். மேட்டுப்பாளையம்–தூத்துக்குடி ரயில் கோவில்பட்டிவரை மட்டுமே பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு நோக்கி செல்கிற விரைவு ரயிலும், பராமரிப்பு பணிகளின் காரணமாக நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் முடியும் வரை பயணிகள் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது – தமிழக அரசு

MUST READ