Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு?

ரயில் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு?

-

 

ரயில் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு?
Photo: ANI

ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்”- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

இந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஒடிஷா மாநிலத்தில் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா அளித்துள்ள பேட்டியில், “அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அடையாளம் காணப்படாதவர்களுக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளுடன் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

ரயில் விபத்தையடுத்து, ஒடிஷா வழியே செல்லும் 48 ரயில்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நேரிட்ட பகுதி வழியே செல்லும் 39 ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

MUST READ