Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் தடையின்றி மின்சாரம் - 18,053 மெகாவாட்

தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் – 18,053 மெகாவாட்

-

தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 18,053 மெகாவாட் மின் நுகர்வு: தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 18,053 மெகாவாட்டாக அதிகரித்தது.

இந்த 18,053 மெகாவாட் மின்சாரம் எந்தவித மின்தடையுமின்றி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த மார்ச் 15ஆம் தேதி 17,749 மெகாவாட் மின் நுகர்வு ஒரு நாளின் அதிகபட்ச மின் நுகர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக தமிழ்நாட்டின் மின்நுகர்வு 18000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

MUST READ