Homeசெய்திகள்தமிழ்நாடுமதிமுகவின் தீயின் பொறி, திருச்சியே குறி.... துரை வைகோ - வைரமுத்து புகழாரம்!

மதிமுகவின் தீயின் பொறி, திருச்சியே குறி…. துரை வைகோ – வைரமுத்து புகழாரம்!

-

 

vairamuthu

மதிமுகவின் தீயின் பொறி, திராவிட நெறி, திருச்சியே குறி என துரை வைகோவை கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

வருகின்ற மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் மதிமுகப் பொதுச்செயலாளர் எம்பியுமான வைகோவின் மகன் தம்பி துரை வைகோ போட்டியிடுகிறார். இவருக்கு பல தலைவர்கள் வாழ்த்துகளையும் மற்றும் ஆசியுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் துரை வைகோ.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாழ்த்துப்பெற வந்தார் திருச்சி வேட்பாளர் தம்பி துரை, வையாபுரி, தீயின் பொறி, திராவிட நெறி, தேர்தலே வெறி, திருச்சியே குறி, நிறைவெற்றி காண்பார் துரை வையாபுரி கவிஞர் வைரமுத்து துரை வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

MUST READ