spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடக அரசைக் கண்டித்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

கர்நாடக அரசைக் கண்டித்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

-

- Advertisement -

கர்நாடக அரசைக் கண்டித்து அம்மாநில எல்லையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வீரப்பன் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா , கடந்த 14 ஆம் தேதி பாலாற்றில் மீன் பிடிக்க சென்ற பொழுது கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்.

நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வருவாய்த்துறை காவல்துறையினர் அளித்த உறுதியின் பேரில் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக வனத்துறையின் அத்துமீரல்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில மகளிர் அணி தலைவர் முத்துலட்சுமி வீரப்பன் மற்றும் அந்த கட்சியினர் ஏராளமானோர் தமிழக கர்நாடக எல்லையில் அமைக்கப்பட்டுள்ள காரைக்காடு சோதனை சாவடிக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் தடுத்ததையும் மீறி சிறிது தூரம் வனப்பகுதிக்கு சென்ற முத்துலட்சுமி வீரப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கர்நாடக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். மேலும் மைசூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதின் பேரில் களைந்து சென்றனர். இதனால் தமிழக எல்லையான காரைக்காடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துலட்சுமி வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறும் போது , கர்நாடக அரசு தனது நிலையை மாற்றி கொள்ளாவிட்டால் எனது கணவரை போல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தி போராட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
எனவே ராஜாவின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு கர்நாடக வனத்துறையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

MUST READ