Homeசெய்திகள்தமிழ்நாடுநாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காரணமே விஜய் தான்... இன்னும் பலரை திமுகவில்...

நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காரணமே விஜய் தான்… இன்னும் பலரை திமுகவில் இணைப்பேன் – சீமானுக்கு, ராஜீவ்காந்தி சவால்!

-

- Advertisement -

பிரபாகரன் உடன் சீமான் படம் எடுத்துக்கொண்டது போல உருவாக்கப்பட்ட படம் கூரியர் வந்த போது சீமானுக்காக அதனை அப்போது வாக்கியதே நான்தான் என திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்பட 3000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாம் தமிழர் கட்சியை கட்டமைக்கும்போது இயக்குனர் மணிவண்ணன் மற்றும் பெரியாரியவாதிகள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை காரணம் காட்டி ஒரு மாற்று அரசியல் வர வேண்டும் என்று நம்பியவர்கள். தொடக்க காலத்தில் இருந்தவர்கள் அனைவரும் சீமானைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறிட்டார்கள். இன்று 8 மாவட்ட செயலாளர்கள், 2 மண்டல செயலாளர்கள், ஒரு மாநில ஒருங்கிணைப்பாளர், 6 சட்டமன்ற வேட்பாளர்கள், 2 பாராளுமன்ற வேட்பாளர்கள் இணைந்துள்ளனர்.

பெரியார் மீது விமர்சனம் செய்வது கருத்து முரண்பாடு என்பது போன்ற கருத்தியல் விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால் ஆதாரம் அற்ற தரவுகளை கொச்சைப் படுத்துகிறபோது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 1938க்கு முன்பு தமிழ்நாடு தமிழருக்கு என்று பெரியார் அறிவிக்கும் வரை தமிழ் தேசியம் என்கிற வார்த்தையை யாரும் பயன்படுத்தவில்லை. தமிழ் தேசிய உணர்வு அதை தமிழ்நாட்டுக்குள் தமிழ்நாடு தமிழர் என்று சென்னை மாகாணத்துக்கு உரைத்தவர் தந்தை பெரியார் தான். தமிழ் தேசியம் பேசிய அத்தனை தலைவர்களும் பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள்தான். பெரியார் சொல்லாததையும் பேசாததையும் தொடர்ந்து தற்குறி சீமான் பேசி வருகிறார். சீமான் பேசுவது ஆபாசம் அவதூறு. அவர் பேசுவதெல்லாம் அண்ட புழுக ஆபாச புழுகு.

சீமான் தனிமனித ஒழுக்கம் இல்லாதவன். தத்துவ ஒழுக்கம் இல்லாதவன், ஒரு சர்க்கஸ் கூடத்தை போல் முதலில் பொதுஉடைமை இயக்கங்களில் ஏறி நின்று சர்க்கஸ் காட்டினார். பின்னர் பெரியார் இயக்கங்களில் தோளில் செய்து சர்க்கஸ் காட்டினார். பின்னர் இயக்குனர் சங்கத்தின் மீது நின்று சர்க்கஸ் காட்டினார். பின்னர் எங்களைப் போல் பெரியாரியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தில் இருந்து சர்க்கஸ் காட்டினார். இலை மலர்ந்தால் ஈழம மலரும் என்று ஜெயலலிதாவின் தோளில் நின்ற சர்க்கஸ் காட்டினார். தற்போது குருமூர்த்தி மற்றும் ஆர்எஸ்எஸ் தோளில் நின்று சர்க்கஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பிறகு ஆர்.எஸ்.எஸ் இன் அடிவருடியாக இருந்தவர் வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார். கருத்து முரணை கருத்து முரணாக எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

விமர்சனம் என்பது ஆதாரத்தோடு விமர்சனம் செய்ய வேண்டும். வெங்காயம் திரைப்படத்தின் இயக்குனர் ஒரு ஆதாரத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்பவர் அந்த வேலையை கொடுத்தார் என்று சொல்கிறார்கள். தற்போது அவர் உயிரோடு இல்லை. செங்கோட்டையனின் ஒரு ஹார்ட் டிஸ்க் கூரியர் வந்தபோது, அதை வாங்கிய அப்பாவி ராஜீவ்காந்தி நான்தான். உள்ளே திறந்து பார்த்தால் தான் தெரிகிறது. அது ஒட்டி வெட்டிய படங்கள். சீமான் பிரபாகரன் உடன் எடுத்த படம் போலி என்ற ஆதாரத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். எடிட் செய்தவரும் சொல்லி விட்டார். அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கிய நானும் சொல்லிவிட்டேன். அதை கொண்டு வந்த செங்கோட்டையனும் தற்போது இல்லை.

தமிழகத்தில் தேர்தல் களத்தில் ஒரு கவுன்சிலர் வாங்க முடியுமா? தமிழ்நாட்டில் முதல் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணன் பத்மநாபன். தம்பி ஒருவர் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றார். அவரும் இங்கு வந்திருக்கிறார். 16 ஆண்டு காலம் தன் வயிற்று பிழைப்பிற்காக மற்றும் குடும்ப பிழைப்புக்காக மட்டும்தான் உழைத்து இருக்கிறார். கட்சிக்காரர்களுக்கு ஆகவும் அதிகாரத்தை நோக்கியும் சீமான் பயணப்பட்டாரா? சீமான் என்றைக்காவது கீழே இறங்கி மக்களை பார்த்து கும்பிட்டு அம்மா ஓட்டு போடுங்கள் என்று கேட்டு பார்த்திருக்கிறீர்களா? அதற்கு மாறாக வேனில் என்று வீர வசனம் பேசுவார். அவரது நோக்கம் அதிகாரத்தை நோக்கி அல்ல. ஆர்எஸ்எஸிலிருந்து அவருக்கு ஓட்டு வர வேண்டும் என்பதற்காக அவர் வேலை செய்கிறார்.

தற்போது மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தவர் விஜய் தான். இவருக்கு வெறும் 4.8 விழுக்காடு தான் இருந்தது. விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டார். ஆனால் தேர்தலில் போட்டியிட அவர் வரவில்லை. அவரும் சீமானும் ஒன்றாக இருக்கிறவர்கள் என்று தவறான தகவல்கள் வெளியே வந்தன. அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு பத்திரிகையில் அண்ணன் தம்பி என்று வந்தவுடன் விஜயின் ஆதரவாளர்கள் சீமானுக்கு ஓட்டு போட்டார்கள். 2026 இல் டெபாசிட்டை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் இழப்பார்.

நான் மேதகு பிரபாகரனை நேசிக்கிற மதிக்கிற போற்றுகிற மனிதன். 15 ஆண்டு காலமாக ஈழத்திற்காக சீமான் புடுங்கிய ஒரு புல்லை காட்டுங்கள். வெறும் பேச்சுக்காக ஒரு மாவீரனை சமையல்காரர் ஆக மாற்றி வைத்திருக்கிறார். பிரபாகரன் பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கும் தமிழகத்தில் இவருக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியதில்லை. தேர்தல்களில் வேட்பாளரை அறிவித்தாலும் அதிமுக மாவட்டச் செயலாளரிடம் 10 லட்சம், 20 லட்சம் என சீமான் பணம் பெற்றுக்கொள்வார். அதற்கான பட்டியலை என்னால் போட முடியும். பிரபாகரனை நீங்கள் சந்தித்தது 2008ல் தான் உண்மைதான் பரவாயில்லை. புகைப்படம் தான் போலி. துப்பாக்கி வைத்திருப்பது ஒன்று இருந்தது. அதுவும் போலி தான். ஆனால் அங்கே அரசியல் பேசியது என்பது பொய்யானது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ