விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவருக்கு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 05ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அங்கு திடீரென மயங்கி விழுந்த புகழேந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 06ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும். ஜூன் 24ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திருப்ப பெற ஜூன் 26ம் தேதி கடைசி நாளாகும்.