தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்றைய தினத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் மொத்தமாக 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து 830 ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மாநாடு நடைபெற்ற அன்றைய தினம் மட்டும் 1 கோடியே 63 லட்சத்து 2ஆயிரத்து 190 ரூபாய்க்கு மது விற்பனை கூடுதலாக விற்பனை ஆகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 86 கடைகளில் 27 ஆம் தேதி 2 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரத்து 300 க்கு விற்பனை ஆகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 109 கடைகளில் 27 ஆம் தேதி 3 கோடியே 23 லட்சத்து 86 ஆயிரத்து 530 க்கு விற்பனை ஆகியுள்ளது. எப்பொழுதும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் 4 கோடியே 69 லட்சத்து 44 ஆயிரத்து 640 க்கும் விற்பனையாகும்
கடந்த 26 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் 2 கோடியே 39 லட்சத்து 23 ஆயிரத்து 190 க்கு விற்பனையானது. விழுப்புரம் மாவட்டத்தில் 26 ஆம் தேதி 2 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரத்து 520 ருபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.