spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரோமிலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா சொரூபம்

ரோமிலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா சொரூபம்

-

- Advertisement -
ரோமிலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா சொரூபம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மேலகோவில்பட்டி புனித சவேரியார் ஆலயத்திற்கு மேரி மாதா சொரூபம் ரோம் நகரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

ரோமிலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா சொரூபம்

கிறிஸ்தவ சமயத்தில் இயேசுவின் அன்னையான மேரி மாதாவை குழந்தையாக பாவித்து வணங்குகின்றனர். குழந்தை மாதாவை இலத்தீன் மொழியில் மரியா பாம்பினா என்று அழைப்பார்கள். குழந்தை மாதாவை வழிபடும் இந்த முறை இத்தாலி நாட்டின் மிலன் நகரில் தோற்றுவிக்கப்பட்டது.

we-r-hiring

தமிழ்நாட்டில் குழந்தை மாதாவிற்கு இரண்டாவது திருத்தலமாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மேலகோவில்பட்டி புனித மரியன்னை பேராளையும் விளங்குகிறது.

ரோமிலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா சொரூபம்

2018 ஆம் ஆண்டு பங்கு தந்தையாக இருந்த ஆண்டனி செழியன் என்பவரால் விண்ணப்பிக்கப்பட்டு தற்போது புனித குழந்தை மாதா சொரூபம் ரோம் நகரில் இருந்து வத்தலகுண்டிருக்கு வந்துள்ளது.

பங்கு தந்தை ஜெயராஜ் மாதா சொரூபத்தை பிரதிஷ்டை செய்து சிறப்பு திருப்பலி வழிபாடு செய்தார். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளனர்.

MUST READ