spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிருதுநகர் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு... பத்திரிகையாளர்கள் போராட்டம்...

விருதுநகர் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு… பத்திரிகையாளர்கள் போராட்டம்…

-

- Advertisement -
கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதேசமயம், தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
விருதுநகர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆனால், காலை 11 மணணி ஆன போதிலும், வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதோடு, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. உள்ளே சென்று செய்தி சேகரிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தடுக்கும் போலீசாரை கண்டித்தும் பத்திரிகையாளர்கள் வாக்கு எண்ணும் மையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ