Homeசெய்திகள்தமிழ்நாடுவிவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடக்கம் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடக்கம் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

-

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழைக் காரணமாக கடந்த சில நாட்களாக விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதில் கனமழையால் அண்மைக் காலமாக ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

தற்போது மழை குறைந்து கடல் இயல்புடன் காணப்பட்டதால் படகு சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் உற்சாகமாகமடைந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதே போல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்திலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உர்சாகம் அடைந்தனர்.

MUST READ