
தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தொழில்துறை அமைச்சரின் மகள்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முத்தையா நேரில் ஆஜரானார். அவரிடம், தமிழகத்தில் மணல் குவாரிகளில் நடைபெற்ற சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
நேற்று (நவ.20) காலை 11.00 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 10.00 மணி வரை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு தமிழக நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முத்தையா அவரது காரிலே புறப்பட்டுச் சென்றார்.
திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
அண்மையில், நாமக்கல், திருவள்ளூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர், சோதனை நடத்தினர். இது தொடர்பாக, தமிழ்நாடு நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு சம்மன் அனுப்பியதாகவும், இதன் அடிப்படையில் நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.