spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாங்கிரஸின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தகுதியான தலைவர்களை நியமிப்போம் - காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது

காங்கிரஸின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தகுதியான தலைவர்களை நியமிப்போம் – காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது

-

- Advertisement -

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் காலியாக உள்ள கட்சி மாவட்டங்களுக்குத் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் மாவட்டத் தலைவர்களை மாற்றுவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய தேசிய காங்கிரஸ் கமிட்டி குழு அமைத்துள்ளது.காங்கிரஸின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தகுதியான தலைவர்களை நியமிப்போம் - காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது
இது குறித்து, “தென்சென்னை மத்திய மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது  தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சென்னை, கே.கே.நகரில் நடைபெற்றது.

தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சலீம் அகமது, “காங்கிரஸ் கமிட்டியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு தகுதியான மாவட்டத் தலைவர்களை நியமிக்க, இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி குழு அமைத்துள்ளதாக கூறினார். அந்த வகையில் தென்சென்னை மத்திய மாவட்டம் உள்ளிட்ட கட்சி மாவட்டங்களுக்கு தாம் பொறுப்பாளராக நியமித்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, மாவட்டத் தலைவர்களுக்கான நேர்காணலை நடத்துவதுடன் தகுதியான ஆறு பேரை இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டிக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக சலீம் அகமது குறிப்பிட்டார்.

we-r-hiring

மாவட்டத் தலைவர் பொறுப்பிற்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் அவர்கள் கட்சியில் எவ்வளவு ஆண்டுகளாக பயணித்து வருகிறார்கள், அவர்களின் செயல்பாடுகள், ஏதாவது வழக்கு உள்ளதா? உள்ளிட்ட எல்லா தகவல்களும் நிரப்பப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் இது போன்று கட்டமைப்புகளை வலுப்படுத்த ராகுல் காந்தியின் ஆலோசனையின்படி இந்திய தேசிய காங்கிரஸ் இந்தப் பணியை செயல்படுத்துவதாக சலீல் கூறினார். 20 நாட்களுக்குள் தேவையான இடங்களில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என குறிப்பிட்ட சலீல் அகமது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தகுதியான மாவட்ட தலைவர்களை நியமிப்போம் என்றார்.

ஏற்கனவே மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும் மாவட்டத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார். அதேசமயம் மூத்த நிர்வாகிகளுக்கும் வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் கலவையான மாவட்ட தலைவர்களை நியமிக்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது தெரிவித்துள்ளாா்.

அன்புமணியை நம்பி யார் போனாலும் கொலை செய்வார்கள் – பாமக எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி

MUST READ