spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடைப்பயணத்தில் புகுந்த காட்டுமாடு -பாஜவினர் அலறியடித்து ஓட்டம்

நடைப்பயணத்தில் புகுந்த காட்டுமாடு -பாஜவினர் அலறியடித்து ஓட்டம்

-

- Advertisement -

கொடைக்கானலில் நடந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தின் போது காட்டுமாடு புகுந்ததால் தொண்டர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பாஜ மாநில  தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மாலை நடைப்பயணத்தை மேற்கொண்டார்.நடைப்பயணத்துக்காக இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் போது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

நடைப்பயணத்தில் புகுந்த காட்டுமாடு -பாஜவினர் அலறியடித்து ஓட்டம்அண்ணாமலை நடந்த இடத்தின் அருகில் இரண்டு பள்ளிகள் உள்ளன.மதியம் 2 மணிக்கு தொடரவேண்டிய பயணமானது 3.30 மணியளவில் தாமதமான காரணத்தினால்,பள்ளிகள் செல்லும் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் இருந்து பாதி தூரத்திலேயே இறக்கி விடப்பட்டு நடந்து சென்றனர்.

we-r-hiring

நடைப்பயணத்தில் புகுந்த காட்டுமாடு -பாஜவினர் அலறியடித்து ஓட்டம்3.30 மணியளவில் நடை பயணம் நாயுடுபுரம் அருகிலிருந்து தொடங்கப்பட்டது. பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டத்தின் இடையே காட்டு மாடு ஒன்று புகுந்தது.அதனை பார்த்த தொண்டர்கள் அலறியடித்து தலை தெறிக்க ஓடினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

MUST READ