Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

-

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரம் வாமடம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(24). பி.காம் பட்டதாரியான இவர், திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர், கோட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக கரூரிலிருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி வந்த பயணிகள் ரயில் முன் திடீரென பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் அவரின் உடலானது ரயிலின் அடிபாகத்தில் சிக்கிக் கொண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்களும் போலீசாரும் ரயிலின் அடிபாகத்தில் சிக்கிய பிரேம் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிரேம்குமாருக்கு நீண்ட நாட்களாக தலைவலி இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

MUST READ