Homeசெய்திகள்ரோஹித் ஷர்மாவுக்கு அவமதிப்பு: விராட் கோலியின் புகைப்படத்தை வைத்து கேலி!

ரோஹித் ஷர்மாவுக்கு அவமதிப்பு: விராட் கோலியின் புகைப்படத்தை வைத்து கேலி!

-

- Advertisement -

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான விளம்பரம் ஒளிபரப்பாகி சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரத்தின் கிராஃபிக்ஸ் இது. இந்த கிராபிக்ஸில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸுடன், அணித் தலைவர் ரோஹித் சர்மா புகைப்படம் இருந்தது. கிராபிக்ஸில் ரோஹித் ஷர்மா, பேட் கம்மின்ஸுடன் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருக்க வேண்டும். இதுவே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதனை நாயகன் விராட் கோலியின் ஐ.பி.எல். பயணம்!

பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போகலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது முறையாக தந்தையாகப் போகிறார். இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார். முதல் டெஸ்ட் மட்டுமின்றி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

MUST READ