கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி அகிய கிராமங்களில் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரமணாக அங்குள்ள 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மண் முடியதால் பொதுமக்கள் மண்ணில் புதைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புதுறையினர் மண்ணில் புதைந்தவரகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீட்பு பணிகளில் ராணுவம், விமானப்படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் தற்போது வரை 76 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்க வேதனை தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாளை பாதிபபுகளை நேரில பார்வையிட உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 கோடி நிவாரணம் அறிவித்துள்ளதுடன், ஐஏஎஸ் அதிகாரிகளையும் கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.