சென்னை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 21 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 21 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது. இயல்பான நிலையில் 335.1 மில்லி மீட்டர் மழை பொழியும் நிலையில், இன்று வரை 404 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 2% குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பான நிலையில் 237.1 மில்லி மீட்டர் மழை பொழிவு நிலையில், இன்று வரை 231.5 மில்லிமீட்டா் மழை பொழிந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நாளை மறு நாள் 18 மாவட்டங்களில் மாவட்டங்கள் கனமழைக்கு வாய்ப்புதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் தேவை – அன்புமணி வலியுறுத்தல்
