தமிழ்நாட்டில் இரவு 7 மணி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சிறியவா்கள் முதல் வயதானவா்கள் வரை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகா் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது. இதனால் சென்னை வாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மேலும், தமிழ்நாட்டில் இன்று இரவு தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
