தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு வங்கக் கடலில் நினைவு வருகிறது என இந்திய மாநிலம் மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா நோக்கி நகர கூடும் எனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பகல் ஒரு மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வளர வாக்கம், சைதாப்பேட்டை, எம் ஜி ஆர் நகர், பந்தலூரில் தலா ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மேட்டூா் அணைக்கு வரும் நீாின் வரத்து 35,800 கன அடியிலிருந்து 29,300 கனஅடியாகக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.4 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக 22,500 கன அடி நீரும் 16 கண் மதகு வழியாக 6,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன்; யாரையும் அழைக்கவில்லை – செங்கோட்டையன்
