தமிழ்நாட்டில் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகக்கூடும் என முன்பே எச்சரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் காலை முதலே பலத்த மழை பதிவாகி வருகிறது. மழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை (மே 2, 3) கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இரு நாட்களிலும் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனுடன், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ரெஸ்ட்…வானிலை ஆய்வு மையத்தின் குளுகுளு அப்டேட்…
