Homeசெய்திகள்ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் படம் விரைவில் திரையிடப்பட உள்ளது. இதனிடையே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 10.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth and Others At The Inauguration of MGR Statue

காலையில் மூத்த மருத்துவர்களின் குழு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், செரிமான பிரச்சனையால் ஏற்பட்ட வயிற்றுவலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முழு உடல் பரிசோதனையும் செய்யவதற்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஒத்திவைப்பு!

இந்த நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் விரைந்து நலம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

MUST READ