spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்2021- ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய கனடா பிரதமர்!

2021- ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய கனடா பிரதமர்!

-

- Advertisement -

 

2021- ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய கனடா பிரதமர்!

we-r-hiring

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவது நாம் அறிந்த ஒன்று. இதேபோன்ற திட்டத்தை மேற்கத்திய நாட்டு அரசு ஒன்றும் தொடங்கியுள்ளது.

“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

கனடாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 2021- ஆம் தேதி தேர்தல் வாக்குறுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஐந்தாண்டுகளுக்காக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை கனடா அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, 1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனடா பிரதமர், “குழந்தைகளின் வயிறு நிரம்பி இருந்தால் தான், அவர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொள்வார்கள் என்பது ஒரு ஆசிரியராக தமக்கு தெரியும். நமது புதிய பள்ளி உணவுத் திட்டம் குழந்தைகள் பசியுடன் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

இந்த திட்டத்தின் மூலம் வகுப்பறையில் குழந்தைகள் தங்களது சிறப்பான திறமையைப் பயன்படுத்துவார்கள் என்றும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

MUST READ