
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,053 பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!
அக்டோபர் 07- ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஹெராத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் வடமேற்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, தொடர்ந்து மூன்று முறை ஏற்பட்டதுடன், ஐந்து முறை மிதமான அளவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணையை வெளியிட்டு அதிரடி காட்டிய ராஜஸ்தான் அரசு!
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிப்பதாக, தகவல் கூறுகின்றனர். நிலநடுக்கத்தில் சுமார் 2,053 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.